Senaikalin karthar / சேனைகளின் கர்த்தரே நின் - Tamil Christian Songs Lyrics
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே
வானவானங்கள் கொள்ளாத
- சேனை
திருவருளிலமே கணுறும் உணரும்
தெருளம்பகமே இனிதுறும் நிசமிது
- சேனை
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய
- சேனை
புவியோர் பதிவான் புகநிதியே
புனருயி ருறுமுழுக் கருளினிதே
புதுவிடமே புகுமனமே புகுமதியே
புரிவொடு இனிதருள்
- சேனை
பேயொடே புவி பேதை மாமிகம்
பேணிடாதடியாருனைப் பேறு தந்தவனே யெனச்சொலி
பேணிடத்துணை பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்
பிசகொழியே திடமளியே பெருமலையினிலரு முயிர்தரும்
- சேனை
ஆலய மது நிறைவாக ஆவைக் குறை வொழிந்தெக
அவரவருனதில மெனமன விடர்சாக
அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும்
ஆலய பர னேச ஆசுக மது வீச
ஆரண மொழி பேச ஆ புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம் அது நிக ரெது
- சேனை
Senaikalin karthar / சேனைகளின் கர்த்தரே நின் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 21, 2015
Rating:
No comments: