Paviki puzhalidam / பாவிக்குப் புகலிடம் இயேசு - Tamil Christian Songs Lyrics
பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே (2)
பரிசுத்தரே பாவமானரே
பாரமான சிலுவை சுமந்தாரே
- பாவிக்கு
உலகத்தின் இரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார் (2)
தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
தளராமல் நம்பி ஒடிவா - (2)
- பாவிக்கு
பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில் (2)
கண்டு நீ மனம் கலங்குவதேன்
கர்த்தன் ஏசுவண்டை ஓடிவா - (2)
- பாவிக்கு
வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வாருங்கள் என்னண்டையில் என்கிறார் (2)
இளைப்பnறுதல் தரும் இயேசுவை
இன்று தேடி நாடி நம்பிவா - (2)
- பாவிக்கு
Paviki puzhalidam / பாவிக்குப் புகலிடம் இயேசு - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 18, 2015
Rating:
No comments: