Nithiyannada karthar yeasuvae / நித்தியானந்த கர்த்தர் இயேசுவே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Nithiyannada karthar yeasuvae / நித்தியானந்த கர்த்தர் இயேசுவே - Tamil Christian Songs Lyrics



நித்தியானந்த கர்த்தர் இயேசுவே
நித்தமும் பிரகாசிக்கின்றார்
பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள் (2)
பரிசுத்தமுடன் மின்னுதே

சீயோனிலே சுவிசேஷக
ஜெப ஐக்கியமே காணுவோம்
ஜெயங் கொண்டோராய்
ஜெப வீரராய்
சிலுவை யாத்திரை செல்லுவோம்

நகர வழி செல்லும் மாந்தருக்காய்
நடு இராப்பகல் அழுதே
நம் தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய் (2)
நனைந்து வருந்தி ஜெபிப்போம்

- சீயோனிலே
அவமானங்கள் பரியாசங்கள்
அடைந்தாலும் நாம் உழைப்போம்
ஆத்தும பாரமும் பிரயாசமும் (2)
ஆல்லும் பகரும் நாடுவோம்

- சீயோனிலே
சிறுமந்தையின் பெரிய மேய்ப்பன்
நெருங்கி வந்து நிற்கிறார்
சின்னவன் ஆயிரம் பதினாயிரம் (2)
சேனைத் திரளாய் மாறுவான்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Nithiyannada karthar yeasuvae / நித்தியானந்த கர்த்தர் இயேசுவே - Tamil Christian Songs Lyrics Nithiyannada karthar yeasuvae / நித்தியானந்த கர்த்தர் இயேசுவே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 18, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.