Immmattum Jeevan Thandha / இம்மட்டும் ஜீவன் தந்த - Tamil Christian Songs Lyrics
1. இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவை அத்தியந்த
பணிவோடுண்மையாக
இஸ்தோத்திரிப்போமாக.
2. நாள் பேச்சைப்போல் கழியும்
தண்ணீரைப்போல் வடியும்;
இதோ, இந்தாள் வரைக்கும்
இவ்வேழை மண் பிழைக்கும்.
3. அநேக விதமான
இக்கட்டையும், உண்டான
திகிலையும் கடந்தோம்;
கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்.
4. அடியார் எச்சரிப்பும்
விசாரிப்பும் விழிப்பும்,
தயாபரா, நீர் தாமே
காக்காவிட்டால் வீணாமே.
5. தினமும் நவமான
அன்பாய் நீர் செய்ததான
அநுக்ரகத்துக்காக
துதி உண்டாவதாக.
6. துன்னாளில் நாங்கள் தாழ்ந்து
நொந்தாலும், உம்மைச் சார்ந்து
நிலைக்கிறதற்காக
திடன் அளிப்பீராக.
7. மா ஜன சேதத்துக்கும்,
உண்டான போர்களுக்கும்
ஓர் முடிவு வரட்டும்,
நொறுங்கினதைக் கட்டும்.
8.சபையை ஆதரித்து,
அன்பாய் ஆசீர்வதித்து,
எல்லாருக்கும் அன்றன்றும்
அருள் உதிக்கப்பண்ணும்.
9. பொல்லாரைத் தயவாக
திருப்பிக்கொள்வீராக;
இருளிலே திரியும்
ஜனத்துக்கொளி தாரும்.
10. திக்கற்றவரைக் காரும்,
நோயாளிகளைப் பாரும்,
துக்கித்தவரைத் தேற்றும்,
சாவோரைக் கரையேற்றும்.
11. பரத்துக்கு நேராக
நடக்கிறதற்காக,
அடியாரை எந்நாளும்
தெய்வாவியாலே ஆளும்.
12. அடியார் அத்தியந்த
பணிவாய்க் கேட்டுவந்த
வரங்களை அன்பாக
தந்தருளுவீராக.
Immmattum Jeevan Thandha / இம்மட்டும் ஜீவன் தந்த - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 24, 2015
Rating:
No comments: