Eadhinil Aadhi Mamam - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Eadhinil Aadhi Mamam - Tamil Christian Songs Lyrics


1. ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே.

2. இப்போதும் பக்தி யுள்ளோர்
விவாகம் தூய்மையாம்;
மூவர் பிரசன்னமாவார்,
மும்முறை வாழ்த்துண்டாம்.

3. ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே,
இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணை
கொடுக்க வாருமே.

4. இரு தன்மையும் சேர்ந்த
கன்னியின் மைந்தனே,
இவர்கள் இரு கையும்
இணக்க வாருமே.

5. மெய் மணவாளனான
தெய்வ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே.

6. நீரும் இந்நாளில் வந்து,
இவ்விரு பேரையும்
இணைத்து அன்பாய் வாழ்த்தி
மெய்ப் பாக்கியம் ஈந்திடும்.

7. கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்று காத்து,
பேர் வாழ்வு ஈந்திடும்.

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Eadhinil Aadhi Mamam - Tamil Christian Songs Lyrics Eadhinil Aadhi Mamam - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 02, 2017 Rating: 5
Powered by Blogger.