Aviyai arulam swami / ஆவியை அருளுமே சுவாமி - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Aviyai arulam swami / ஆவியை அருளுமே சுவாமி - Tamil Christian Songs Lyrics

ஆவியை அருளுமே சுவாமி எனக்
காயுயிர் கொடுத்த வானத்தினரசே (2)

பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்
பரம கந்தோஷம் நீடிய சாந்தம் (2)
தேவ சமாதானம் நற்குணம் தயவு
திட விசுவாசம் சிறிதெனுமில்லை

- ஆவியை
தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்
திரி யவியாமலே தீண்டியே யேற்றும் (2)
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்

- ஆவியை
நற்கனி தேடிவருங் காலவருங் காலங்க ளல்லவோ
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ (2)
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ

- ஆவியை


Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Aviyai arulam swami / ஆவியை அருளுமே சுவாமி - Tamil Christian Songs Lyrics Aviyai arulam swami / ஆவியை அருளுமே சுவாமி - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 14, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.