Arulnadha Nambi Vandhan / அருள்நாதா நம்பி வந்தேன் - Tamil Christian Songs Lyrics
1. அருள்நாதா நம்பிவந்தேன்,
நோக்கக்கடவீர்.
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.
2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.
3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்திசெய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.
4. துணை வேண்டி நம்பி வந்தேன்,
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.
5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,
ஞானம் பெலனும்;
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.
6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.
Arulnadha Nambi Vandhan / அருள்நாதா நம்பி வந்தேன் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 23, 2015
Rating:
No comments: