Maangal neerodai vanchithu / மான்கள் நீரோடை வாஞ்சித்து - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Maangal neerodai vanchithu / மான்கள் நீரோடை வாஞ்சித்து - Tamil Christian Songs Lyrics


மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுதே

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே

ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவோம்

யோர்தான் தேசத்திலும்
ஏர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன்

தேவரிர் பகற்காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவில் பாடும் பாட்டு எந்தன்
வாயிலிருக்கிறதே

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Maangal neerodai vanchithu / மான்கள் நீரோடை வாஞ்சித்து - Tamil Christian Songs Lyrics Maangal neerodai vanchithu / மான்கள் நீரோடை வாஞ்சித்து - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 10, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.