Kartharrai nam endrum / கர்த்தரை நாம் என்றும் ஸ்தோத்தரிப்போம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Kartharrai nam endrum / கர்த்தரை நாம் என்றும் ஸ்தோத்தரிப்போம் - Tamil Christian Songs Lyrics




கர்த்தரை நாம் என்றும் ஸ்தோத்தரிப்போம்
கர்த்தர் நல்லவர் அதை ருசிப்போம் (2)

கர்த்தர் நமக்காய் யாவையுமே
கனிவோடு செய்து முடித்தார் துதிப்போம் (2)

- கர்த்தரை
எண்ணிலடங்கா நன்மைகள் செய்தார்
கண்மணி போல் நம்மைக் காத்தாரே (2)
நாவின் கனியே ஸ்தோத்திர பலி
நன்றி நிறைந்தே ஏறெடுப்போம் (2)

- கர்த்தரை
வெள்ளம் போல் சத்துரு வந்திடும் போது
வல்லவர் வாக்கை நம்பிடுவோம் (2)
ஆவியானவர் கொடி ஏற்றுவார்
ஆர்ப்பரிப்போம் ஜெயம் நமக்கே (2)

- கர்த்தரை
கர்த்தர் வருவார் காலம் செல்லாதே
கண்டுணர்வோம் அடையளங்களை (2)
பாழாய்ப் போகும் பூவுலகம்
பறந்து சொல்வோமே மேலுலகம் (2)

- கர்த்தரை

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Kartharrai nam endrum / கர்த்தரை நாம் என்றும் ஸ்தோத்தரிப்போம் - Tamil Christian Songs Lyrics Kartharrai nam endrum / கர்த்தரை நாம் என்றும் ஸ்தோத்தரிப்போம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 10, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.