Kartharin panthiyel va / கர்த்தரின் பந்தியில் வா சகோதரா - Tamil Christian Songs Lyrics
கர்த்தரின் பந்தியில் வா சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா (2)
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின (2)
காரயத்தை மனப் பூரணமாய் எண்ணி
ஜீவ அப்பம் அல்லோ கிறிஸ்துவின்
திருச் சரீரம் அல்லோ
பாவ மனங் கல்லோ உனக்காய்
பகிரப்பட்ட தல்லோ
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ (2)
தின்று அவருடன் என்றும் பிழைத்திட
- கர்த்த
தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்
சீஷர் குறை தீரு
பாவக் கேட்டைக் கூறு ராப்போசன
பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் (2)
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே
- கர்த்த
அன்பின் விருந்தாமே கர்த்தருடன்
ஐக்யப் பந்தி யாமே
துன்பம் துயர் போமே இருதயம்
சுத்த திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு (2)
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா
- கர்த்த
Kartharin panthiyel va / கர்த்தரின் பந்தியில் வா சகோதரா - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
February 10, 2015
Rating:
No comments: