Kalvari katchi Kanadha - Tamil Christian Songs Lyrics
கல்வாரி காட்சியை காணாத கண்களும் கண்களல்ல
கர்த்தர் இயேசுவை வணங்காத கரங்களும் கரங்களல்ல
இயேசு புகழ் சொல்லாத வாயும் ஒர் வாய் அல்ல
இயேசு இல்லாத இதயம் இதயமே இல்லை (3)
இதயம் என்று ஒன்று இருந்தாலே
இந்த இயேசுவை மறந்திட முடியுமா (2)
எதையும் தாங்கும் நல் இதயம் கொண்ட
இயேசுவின் தினம் வாழ்வு விடியுமா
விடியுமா நள்கதி அடையுமா
- இதயம்
ஆதியில் வார்த்தையாய் இருந்த தேவன்
மாம்சத்தில் வந்த இயேசுவானார் (2)
ஆவியாய் இருந்த தேவன் அவர்
அநீதி இருள் தனில் வாழ்வோர்க்கு (2)
இயேசு நீதியின் சூரியனே வழியானார் (2)
மகிமையின் ஒளியாய் இருந்த தேவன்
பாவ மனிதனை மிட்க மனிதனானார் (2)
மனித மீறுதலின் நிமித்தம் இயேசு காயப்பட்டார்
மாந்தர் அக்கிரமங்கள் நிமித்தம்
இயேசு நொறுக்கப்பட்டார் (2)
அவமான நிந்தயை அவர் அடைந்து (2)
சமாதான வாழ்வை நமக்குத் தந்தார் - இயேசு
சமாதான வாழ்வை இனி நமக்குத்தந்தார்
- இதயம்
Kalvari katchi Kanadha - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
February 11, 2015
Rating: