Kalankathe karthar - Tamil Christian Songs Lyrics
கலங்காதே கர்த்தர் உன்னை காப்பார்
திகையாதே தேவன் உன்னோடு இருக்கின்றார்
கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை காப்பார்
திகையாதே திகையாதே தேவன் உன்னுடன் இருக்கின்றார்
நீ அவர் அடியவனே அவர் உந்தன் அடைக்கலமே
நீ இயேசு அடியவனே
இயேசு உந்தன் அடைக்கலமே
- கலங்காதே
காற்றும் கடலும் வானும் புவியும்
ஒர் நாள் ஒழிந்து விடும் (2)
நேற்றும் இன்றும் என்றும்
மாறா இயேசுவின் வார்த்தை ஒழியாது
காக்கம் இயேசுவின் கருணை கரங்கள் (2)
உன்னை விட்டு விலகாது
- கலங்காதே
ஏழ்மை பகைமை துன்பம் துயரம்
எது உன்னை நெருங்கினாலும் (2)
ஏற்ற வேளையில் உதவிடும் இயேசு
ஏன்றும் உன்னோடு இருக்கின்றார்
கேட்கும் வரங்களை கொடுத்திடும் கர்த்தர்
கிருபையாய் காத்திடுவார் (2)
- கலங்காதே
Kalankathe karthar - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
February 11, 2015
Rating: