Ennaillatanka sothiram - Tamil Christian Songs Lyrics
எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் தேவா
என்றென்றும் நான் பாடுவேன் (2)
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே
- எண்ணிலடங்கா
வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே (2)
- எண்ணிலடங்கா
காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி துறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுமே (2)
- எண்ணிலடங்கா
நீரினில் வாழ்கின்ற யாவும் இந்
நிலத்தின் ஜீவ ராசியும்
பாரின்ல் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே (2)
- எண்ணிலடங்கா
Ennaillatanka sothiram - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
February 11, 2015
Rating: