Enna nesikkendraya - Tamil Christian Songs Lyrics

என்னை நேசிக்கின்றாயா
என்னை நேசிக்கின்றாயா
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா
பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார் (2)
பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய் (2)
- என்னை
பாவம் பாரா பரிசுத்தத்தால்
பாவி உன்னை அழைக்கின்றேன் பார் (2)
உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்
பாதம் தன்னில் இளைப்பாற வா (2)
- என்னை
வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
தேடி மீட்டிட விதா அனுப்பியதால்
ஓடி வந்தேன் மானிடனாய்
- என்னை
உன்னை நேசிக்கின்றேன் நான்
உன்னை நேசிக்கின்றேன் நான்
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனா
Enna nesikkendraya - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
February 11, 2015
Rating:
