Ekkala satham / எக்காள சத்தம் வானில் - Tamil Christian Songs Lyrics
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார் (2)
அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே (2)
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனைச் சந்திப்போமே (2)
- எக்காள சத்தம்
வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்கு தான் மாறிடாதே (2)
தேவதூதர் பாடல் தொனிக்கத்
தேவன் அவரையே தரிசிப்போமே (2)
- எக்காள சத்தம்
கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் (2)
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சம் ஆவார் (2)
- எக்காள சத்தம்
கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் (2)
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் (2)
- எக்காள சத்தம்
Ekkala satham / எக்காள சத்தம் வானில் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
February 11, 2015
Rating:
This comment has been removed by the author.
ReplyDeletePraise the lord ,Jesus name always gets glorify into this world forever and ever.
ReplyDelete