Sarvalogathinba namaskaram / சர்வலோகாதிபா நமஸ்காரம் - Tamil Christian Songs Lyrics
சர்வலோகாதிபா நமஸ்காரம்
சர்வசிருஸ்டிகனே நமஸ்காரம் (2)
தரைக்கடல் உயிர்வாழ் சகலமும்
படைத்த தயாபரா பிதாவே நமஸ்காரம் (2)
- சர்வலோகாதிபா நமஸ்காரம்
திரு அவதாரா நமஸ்காரம்
ஜெகத்தி இரட்சகனே நமஸ்காரம்
தரனியில் மனுடர் உயிரடைந்தோங்க
தருவினில் மான்டோய் நமஸ்காரம் (2)
- சர்வலோகாதிபா நமஸ்காரம்
பரிசுத்த ஆவி நமஸ்காரம்
பரமசர் குருவே நமஸ்காரம்
அருவியாய் அடியார் அகத்தினில்
வசிக்கும் அரிய சித்தேசாத நமஸ்காரம் (2)
- சர்வலோகாதிபா நமஸ்காரம்
முத்தொழிலோனே நமஸ்காரம்
மூன்றில் ஒன்றோனே நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா கருணா சமூத்ரா
நித்திய திரியேகா நமஸ்காரம் (2)
- சர்வலோகாதிபா நமஸ்காரம்
Sarvalogathinba namaskaram / சர்வலோகாதிபா நமஸ்காரம் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 10, 2015
Rating:
No comments: