Rajathi rajavazha arasalum / இராஜாதி ராஜாவாக அரசாளும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Rajathi rajavazha arasalum / இராஜாதி ராஜாவாக அரசாளும் - Tamil Christian Songs Lyrics



இராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே
உம்மைபோன்ற தெய்வம் இல்லை
உம்மைபோன்ற கர்த்தர் இல்லை

இராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே

உலகில் உள்ள யாவற்றிற்க்கும் சொந்தக்காரரே
நதிகள் கூட கைகள் தட்டி உம்மை பாடுதே
இராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே

நீதியுள்ள இராஜாவாக ஆளும் தெய்வமே
இரக்கம் உருக்கம் தயவு எல்லாம் உம்மில் தான் உண்டே
இராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே

பாவம் போக்க பாலனாக மண்ணில் வந்தவரே
உலகை அளும் இராஜாவாக மீண்டும் வருவீரே
இராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே

கண்ணீர் கவலை கஷ்டம் யாவும் நீக்கிப்போட்டீரே
சந்தோஷமும் சமாதானமும் நிறைவாய் தந்தீரே
இராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Rajathi rajavazha arasalum / இராஜாதி ராஜாவாக அரசாளும் - Tamil Christian Songs Lyrics Rajathi rajavazha arasalum / இராஜாதி ராஜாவாக அரசாளும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 10, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.