Mesia kirust yesuvae / மேசியா கிறிஸ்தேசுவே - Tamil Christian Songs Lyrics
மேசியா கிறிஸ்தேசுவே
மீட்பரே எந்தன் கர்த்தரே (2)
இன்று உம்மை ஜெனிப்பித்தார்
இராஜாவாய் உன்னை அபிஷேகித்தார் (2)
கேளும் பூமியின் எல்லைகளை
மாளும் ஜாதி ஜனங்களை
சொந்தமாய் தருவேன் சுதந்தரிப்பாய் என்று (2)
எந்தை பிதா உரைத்தார்
- அல்லேலுயா
வானோர் பூதலத்தோர்களின்
முழங்கால் யாவும் முடங்கிடுமே (2)
ஏசுகிறிஸ்து கர்த்தரென்று
நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் (2)
ஏசுவின் திரு நாமம்
- அல்லேலுயா
மன ஆலயத்தில் நமதேசு
மனுகுல தெய்வம் வீற்றீருப்பார் (2)
கடைசி காகளம் தொனித்திடும்
கழுகு போல் எழும்பி பறந்திடுவோம்
நம் எஜமான் நம்மை கண்ணிமைப் பொழுதில் (2)
நடுவானில் எடுத்துக் கொள்வார்
- அல்லேலுயா
Mesia kirust yesuvae / மேசியா கிறிஸ்தேசுவே - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 11, 2015
Rating:
No comments: